Ad Widget

வட மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயார் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்.

வட மாகாண ஆளுநர் கௌரவ  பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள்,...

மீண்டும் பிறபோடப்பட்டது இலங்கை – இந்திய கப்பல் சேவை.

காங்கேசன்துறை - நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை 17ம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் தற்போது 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே...
Ad Widget

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் புலமைப்பரிசில்!

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சனாதிபதி நிதியம் ஆகியவை ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் 2024 / 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்தும்...

மல்லாவி நகர நீர் வழங்கலுக்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு...

குமுதினிப் படுகொலையின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் மத அனுட்டானங்களுடன் ஆரம்பம்.

குமுதினிப்படுகொலையின் 39ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (வைகாசி 15) காலை 07.00 மணிக்கு மத அனுட்டானங்களுடன் ஆரம்பமாகியுள்ளது. 1985ம் ஆண்டு இதே நாள் நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட குமுதினிப்படகு இடைக்கடலில் தடுக்கப்பட்டு படுகொலை செய்யப்படடவர்களை வருடந்தோறும் நினைவு கூறும் நிகழ்வு நெடுந்ததீவில் இடம் பெற்று வருவது வழமை அந்த வகையில் இன்றைய...

ரணில் மீட்பர் அல்லர் ; ஒரு பொருளாதார அடியாள் சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் பொ . ஐங்கரநேசன் சாடல்

ராஜபக்ஸ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின் வாழ்வு மேம்படும் என்று சொல்லியே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் , இன்று இலங்கையின் சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.2019ஆம் ஆண்டு...

எதிர்வரும் 3 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு – கிராம சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு!

இன்று (14) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சுகவீன விடுமுறையை அறிவித்து சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். கிராம சேவை...

தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் நிலையில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும்...

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள்களை உற்பத்தி செய்யும் நிலையம்! பொலிசார் முற்றுகை!!

யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக இணுவிலில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று பொலுசாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கி வந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள்...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவருவதற்கு முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னரே கல்வி பொதுத்தராதர உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts