Ad Widget

பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் உயிரிழப்பு!

Ad Widget

மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி, சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

62 வயதான ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன் என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பன்றி சிறுநீரகம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

எனினும் மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் 100,000இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.