Ad Widget

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் 20 ஆவது நினைவேந்தல் யாழில் அனுட்டிப்பு

Ad Widget


மட்க்களப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிமை) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பமானதை தொடர்ந்து திரு. நடேசனின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மூத்தஊடகவியாளர் சி.தில்லைநாதன் ஏற்றிவைக்க மலர் மாலையினை ஊடக இல்லத்தலைவர் மகாலிங்கம் அணிவித்தார்.

தொடர்ந்து வடமராட்சி ஊடக இல்லத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts