Ad Widget

எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுகின்றன

Ad Widget

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது

Related Posts