காங்கேசன்துறை – நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை 17ம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் தற்போது 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து தொடங்குவது மீண்டும் தாமதம் ஏற்பட்டதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.