குமுதினிப்படுகொலையின் 39ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (வைகாசி 15) காலை 07.00 மணிக்கு மத அனுட்டானங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.
1985ம் ஆண்டு இதே நாள் நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட குமுதினிப்படகு இடைக்கடலில் தடுக்கப்பட்டு படுகொலை செய்யப்படடவர்களை வருடந்தோறும் நினைவு கூறும் நிகழ்வு நெடுந்ததீவில் இடம் பெற்று வருவது வழமை அந்த வகையில் இன்றைய தினமும் ஏற்பாட்டுக் குழுவினரால் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலையில் புனித சவோரியார் ஆலயம், மாவிலித்துறை வீரப்பத்திரப் பிள்ளையார் ஆலயம், தென்னிந்தியத்திருச்சபை மற்றும் தேவ சபை ஆகியவற்றில் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் இடம் பெற்றன.
தொடர்ச்சியாக காலை 09 மணிக்கு மாவிலித்துறைமுகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.