Ad Widget

தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் நிலையில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Related Posts