இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்கு காரணம், ஒருவகையில் சைந்தவியின் தாயார் தான் காரணம் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வயதிலேயே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில பாடல்களை பாடி பிரபலமான ஜிவி பிரகாஷ். தன்னுடைய மாமாவிடம் இசையை கற்றுக்கொண்டு ஒரு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர். ஜிவி பிரகாஷின் அம்மா ரிஹானாவும் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் பிரபலமானவர். கடந்த 2006-ஆம் ஆண்டு, வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷின் இசை முதல் படத்திலேயே அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, ‘உருகுதே மருகுதே..’, ‘வெயிலோடு விளையாடி…’ ஆகிய பாடல்கள் இன்று வரை பல ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது.
பின்னர் ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இசையை தாண்டி, பாடகர், நடிகர், தயாரிப்பாளராகவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே, அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த சைந்தவி என்பவரை காதலிக்க தொடங்கிய நிலையில்.. இவர்களது காதல் 2013-ஆம் ஆண்டு திருமணத்திலும் முடிந்தது. ஜிவி – சைந்தவி ஜோடிக்கு அன்வி என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பின்பே இவர்களுக்கு குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், சைந்தவியின் தாயாரும் இவர்களின் விவாகரத்து ஒருவகையில் காரணம் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘ஜிவி பிரகாஷும், சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக்கொள்வதில்லை. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் ஜிவி நடிகராக மாறிய பின் அவரின் நடவடிக்கைகளால் சிறிய விரிசல் ஒன்று விழுந்திருந்தது என்று கூறிய அவர், முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் சைந்தவியின் அம்மா சனாதனத்தை சார்ந்தவர். அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அமித் ஷாவை சந்தித்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும், விஜய் உள்ளிட்டோர் சில பிரபலங்கள் சமாதானம் செய்ய பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவை கைவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.