Ad Widget

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை !

Ad Widget

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானமை மற்றும் தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவே இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts